Friday, December 19, 2008

இளம் நட்பு




எத்தனை நட்பு கிடைத்தாலும் , இளம் வயது நட்பு மனதுக்குள்ளே தங்கி தான் விடுகிறது.


மீண்டும் அந்த நட்புக்காக மனசு ஏங்கி தவிக்கும் .


கள்ளம் இல்லாமல் சிரித்து பழகிய காலம் மீண்டும் வராதா என்று ஏங்கும்.




மழை காலம் வந்தால் போதும் ....காளான் முளைப்பது போலே பழைய நினைவுகள் முளைத்து விடும் .


கல்லூரியின் அடர்ந்த மரங்கள், மழை துளிகளுடன் அமைதி காத்திடும் போது , நனைந்த அந்த சாலையில் உன் சூடான விரல்கள் பற்றி நடந்த அந்த இதமான உணர்வை யாருமே தர முடிய வில்லை .




அப்பா அம்மா உலகில் இருந்து வெளியே வந்து, யார் நண்பர்கள் , நட்பு இப்படி தான் inikkum என்று உணரவைத்த நண்பர்கள் ,தோழிகள் இன்னும் நினைவில் அப்படியே .




இப்படி இளம் பருவத்து நினைவுகளை என்னுடன் நினைத்து பாருங்களேன் ......


உங்கள் உள்ளத்திலும் ,கண்களிலும் சாரல் ....




நட்பை நேசிக்கும் உங்கள் ........






No comments:

Post a Comment