Saturday, December 20, 2008

எனக்காக வரமாட்டாயா?







நன்றாக இருந்திருக்கும்..............



அவள் என்னுடன் இருந்திருந்தால் .



உலகம் சுற்றும் என்னுடன் , என் உலகை பகிர்ந்துகொள்ள அவள் வேண்டும்






காதல் இத்தனை வலியதாக இருக்கும் என்று தெரிந்திருந்தால் என்மனதிற்கினிய தோழியை நான் பிரிந்திருக்கவே மாட்டேன் .






சந்தோஷமாக இருக்கும் நேரங்களில் ,தோள்களை இறுக்கி அணைத்து கழுத்தில் முத்தம் பதிக்க வேண்டும் .






என் குழந்தையாய் உன்னை சுமக்க வேண்டும் .






என் குழந்தைகளின் பிரிய அம்மாவாக உன் தோற்றத்தை ரசிக்க வேண்டும் .






தவறு செயும்போது கண்டிக்கும் உன் நேர்மையை மதிக்க வேண்டும் .



பருத்தி புடவையில் திமிரும் உன் பெண்மையின் அழகை ரசிக்க வேண்டும் .




உன் வேதனையில் பாதியை சுமக்க வேண்டும்




உனக்கு எது பிடிக்கும் என்று பார்த்து பார்த்து பரிசளிக்க வேண்டும்




இத்தாலியின் தெருக்களில் உன் கை கோர்த்து நடந்து நீ ரசிக்கும் அழகை ரசிக்க வேண்டும்.




பனி படர்ந்த ஜெர்மன்யின் காட்டுக்குள் உன்னை முயங்க வேண்டும் .




ஒரு நாள் மட்டும் உன்னுடன் வாழ்ந்தாலும் போதும் என் தோழியே ...இத்தனை செய்யும் எனக்காக மறுபடி திரும்பி வரமாட்டயா.......




Friday, December 19, 2008

இளம் நட்பு




எத்தனை நட்பு கிடைத்தாலும் , இளம் வயது நட்பு மனதுக்குள்ளே தங்கி தான் விடுகிறது.


மீண்டும் அந்த நட்புக்காக மனசு ஏங்கி தவிக்கும் .


கள்ளம் இல்லாமல் சிரித்து பழகிய காலம் மீண்டும் வராதா என்று ஏங்கும்.




மழை காலம் வந்தால் போதும் ....காளான் முளைப்பது போலே பழைய நினைவுகள் முளைத்து விடும் .


கல்லூரியின் அடர்ந்த மரங்கள், மழை துளிகளுடன் அமைதி காத்திடும் போது , நனைந்த அந்த சாலையில் உன் சூடான விரல்கள் பற்றி நடந்த அந்த இதமான உணர்வை யாருமே தர முடிய வில்லை .




அப்பா அம்மா உலகில் இருந்து வெளியே வந்து, யார் நண்பர்கள் , நட்பு இப்படி தான் inikkum என்று உணரவைத்த நண்பர்கள் ,தோழிகள் இன்னும் நினைவில் அப்படியே .




இப்படி இளம் பருவத்து நினைவுகளை என்னுடன் நினைத்து பாருங்களேன் ......


உங்கள் உள்ளத்திலும் ,கண்களிலும் சாரல் ....




நட்பை நேசிக்கும் உங்கள் ........